அன்றும், இன்றும், என்றும் Lake Ontario தான்! Carney அதிரடி பதில்

அமெரிக்கா–கனடா இடையிலான பதற்றம் தற்போது ஒரு ஏரியின் பெயர் வரை வந்துவிட்டது!

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அமைந்துள்ள புகழ்பெற்ற Lake Ontario-வை “Lake America” என அழைக்க அமெரிக்க ஜனாதிபதி Donald Trump உத்தரவிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 27ஆம் திகதி White House-ல் இதற்கான உத்தரவில் Trump கையெழுத்திட்டார். அமெரிக்க அரசின் வரைபடங்கள், ஆவணங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்களில் Lake Ontario என்பதற்குப் பதிலாக “Lake America” என்ற பெயரை பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கனடாவின் பிரதமர் Mark Carney உடனடியாக இதற்கு பதிலளித்துள்ளார்.

“Lake Ontario – அன்றும், இன்றும், என்றும்!” என்பதே கனடியர்களின் நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார்.

Lake Ontario என்ற பெயருக்கு 400 ஆண்டுகளுக்கும் அதிகமான வரலாறு இருப்பதாகவும், அது அமெரிக்காவின் Declaration of Independence வெளியானதற்கு முன்பே பயன்பாட்டில் இருந்ததாகவும் Carney சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் முக்கியமான கேள்வி — Donald Trump உண்மையில் Lake Ontario-வின் பெயரை மாற்ற முடியுமா?

அமெரிக்காவுக்குள் பயன்படுத்தப்படும் பெயரை அவர் மாற்ற முடியும்.

அமெரிக்க அரசின் வரைபடங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் “Lake America” என்ற பெயர் பயன்படுத்தப்படலாம்.

ஆனால் கனடா அந்தப் பெயரை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று Trump உத்தரவிட முடியாது. சர்வதேச அளவிலும் Lake Ontario என்ற பெயரை மற்ற நாடுகள் மாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை.

Related Articles

Latest Articles