கனடாவின் தலைநகர் Ottawa-வில் நடைபெறவுள்ள மேயர் தேர்தலில், வீட்டிலிருந்து வேலை செய்வதா அல்லது ஊழியர்களை அலுவலகத்திற்கு திரும்ப அழைப்பதா என்ற விவகாரம் தற்போது முக்கிய தேர்தல் பிரச்சினையாக மாறியுள்ளது.
Ottawa மேயர் பதவிக்குப் போட்டியிடும் Jeff Leiper, தான் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் நகராட்சி ஊழியர்களுக்கான தற்போதைய ஐந்து நாள் அலுவலக வேலை நடைமுறையை மாற்றி, பணியின் தன்மை அனுமதிக்கும் இடங்களில் ஊழியர்களுக்கு அதிகபட்ச நெகிழ்வுத்தன்மையை வழங்குவதாக அறிவித்துள்ளார்.
அதாவது, பொதுச் சேவைகள் பாதிக்கப்படாத சூழ்நிலையில், ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற விரும்பினால் அதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்பது Leiper-இன் நிலைப்பாடு.
சில ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாட்களும் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியுமா என கேட்கப்பட்டபோது, அதற்கும் வாய்ப்பு இருக்கலாம் என்பதையே அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“இது நமது நேரம், நமது பணம், நமது வாழ்க்கைத் தரம் தொடர்பானது,”
என்று கூறிய Leiper, அலுவலகத்திற்குச் செல்வதற்காக மக்கள் போக்குவரத்து நெரிசலிலும் நிரம்பிய பேருந்துகளிலும் நேரத்தை இழக்க வேண்டியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
Ottawa நகரம் கடந்த ஆண்டு நகராட்சி ஊழியர்களுக்கு ஐந்து நாள் office standard ஒன்றை அறிமுகப்படுத்தியது. ஆனால் நகர ஊழியர்களில் குறைந்தது 85 சதவீதமானோர் front-line பணியாளர்கள் என்பதால், அவர்கள் ஏற்கனவே நகர வசதிகள் அல்லது வெளிப்பணிகளில் முழுநேரமாக பணியாற்றி வருகின்றனர். எனவே இந்த மாற்றம் நகர ஊழியர்களில் ஒரு சிறிய பகுதியையே நேரடியாக பாதிக்கிறது.
ஆனால் மத்திய அரசின் Return-to-Office கொள்கை Ottawa மக்களை மிகப் பெரிய அளவில் பாதிக்கிறது.
தற்போது பெரும்பாலான Federal Public Servants வாரத்தில் நான்கு நாட்கள் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது. இந்தக் கொள்கையையும் மத்திய அரசு மீளப்பெற வேண்டும் என்று, தான் மேயரானால் வலியுறுத்துவதாக Leiper தெரிவித்துள்ளார்.
Ottawa-வின் தற்போதைய மேயரும் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் Mark Sutcliffe, இதற்கு மாறுபட்ட அணுகுமுறையை கொண்டுள்ளார்.
Federal employees அதிக நாட்கள் அலுவலகத்திற்கு திரும்புவது Ottawa downtown வர்த்தகங்களுக்கும் பொதுப் போக்குவரத்துக்கும் நன்மை பயக்கும் என்று Sutcliffe முன்னர் தெரிவித்திருந்தார்.
ஆனால் Leiper அதனை ஏற்கவில்லை.
Ottawa downtown-இன் எதிர்காலம் அரச ஊழியர்களை கட்டாயமாக அலுவலகத்திற்கு அழைத்து வருவதில் தங்கியிருக்கக் கூடாது என்றும், downtown பகுதியில் அதிகமான மக்கள் குடியேறி வாழ்வதே அப்பகுதியின் பொருளாதாரத்தை நீண்டகாலத்தில் உயிர்ப்புடன் வைத்திருக்கும் வழி என்றும் அவர் கூறுகிறார்.
மேலும், மத்திய அரசின் புதிய office mandate காரணமாக ஏற்படக்கூடிய கூடுதல் போக்குவரத்து அழுத்தத்தை சமாளிக்க தேவையான infrastructure Ottawa-விடம் தற்போது இல்லை என்றும் Leiper வாதிடுகிறார்.
இதற்குப் பதிலளித்த Mark Sutcliffe, நகர ஊழியர்கள் எத்தனை நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்பதை தீர்மானிப்பது மேயரின் பணி அல்ல என்றும், அது City Manager-இன் நிர்வாகத் தீர்மானம் என்றும் கூறியுள்ளார்.
நகரத்தின் தற்போதைய நடைமுறையிலும் நெகிழ்வுத்தன்மை இருப்பதாகவும், ஒவ்வொரு ஊழியரும் தங்கள் manager-உடன் இணைந்து தங்களுக்கு ஏற்ற வேலை அட்டவணையைத் தீர்மானிக்க முடியும் என்றும் Sutcliffe தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது என்பதும் அவரது நிலைப்பாடு.
மற்றொரு மேயர் வேட்பாளரான Alex Lawson-மும், எல்லா ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான கட்டாய வேலை நடைமுறையை விதிப்பது சரியான தீர்வல்ல என்கிறார்.
தான் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், Federal Government தனது நான்கு நாள் office mandate-ஐ மீளப்பெற வேண்டும் என்று Ottawa நகரம் சார்பில் அதிகாரபூர்வமாக கோரிக்கை விடுப்பதாக அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
Downtown-ஐ காப்பாற்றுவதற்காக ஊழியர்களை தினமும் நீண்ட தூரம் பயணம் செய்ய வைப்பது தீர்வல்ல என்றும் Lawson கூறுகிறார்.
மக்கள் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து வேலைக்குச் சென்று, மீண்டும் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து வீடு திரும்ப வேண்டிய நிலையில், அவர்கள் வாங்கும் சில coffees அல்லது sandwiches மட்டுமே Ottawa downtown-ஐ காப்பாற்றிவிடாது என்பதே அவரது வாதம்.
மேயர் வேட்பாளரான பொருளாதார நிபுணர் Neil Saravanamuttoo-வும் நகர ஊழியர்களுக்கு நெகிழ்வான வேலை ஏற்பாடுகள் வழங்கப்பட வேண்டும் என்பதில் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆனால் Federal Return-to-Office கொள்கையை முழுமையாக ரத்து செய்யுமாறு கோருவது நடைமுறைசார் தீர்வாக இல்லாமல் அரசியல் நாடகமாக இருக்கலாம் என்று அவர் Leiper-ஐ விமர்சித்துள்ளார்.
அதற்குப் பதிலாக, Ottawa-வின் போக்குவரத்து அமைப்புக்கு கூடுதல் Federal funding பெறுவது, shuttle buses ஏற்படுத்துவது போன்ற தீர்வுகளையே முதலில் முன்வைக்க வேண்டும் என்றும், அந்த வசதிகள் ஏற்படுத்தப்படும் வரை Federal Government தனது return-to-office திட்டத்தை தாமதப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
மேலும், Federal employees நகர மையத்திற்கு நீண்ட தூரம் பயணம் செய்வதைத் தவிர்க்க Orleans, Barrhaven மற்றும் Ottawa South போன்ற புறநகர் பகுதிகளில் shared workspaces அல்லது satellite offices உருவாக்குவது குறித்த யோசனைகளும் வேட்பாளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதனால் Ottawa மேயர் தேர்தலில் தற்போது ஒரு புதிய கேள்வி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது:
COVID காலத்தில் உருவான Work From Home நெகிழ்வுத்தன்மையை தொடர வேண்டுமா?
அல்லது Downtown பொருளாதாரம், பொதுப் போக்குவரத்து மற்றும் பணியிட கலாசாரத்தை வலுப்படுத்த ஊழியர்கள் மீண்டும் அலுவலகத்திற்கு வர வேண்டுமா?
இந்த விவகாரம் Ottawa-வின் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களின் வேலை வாழ்க்கையை மட்டுமல்லாமல், போக்குவரத்து, downtown businesses மற்றும் எதிர்வரும் மேயர் தேர்தலின் வாக்குகளையும் தீர்மானிக்கக்கூடிய முக்கிய தேர்தல் விவகாரமாக மாறியுள்ளது.










