றொரண்டோவின் (Toronto) கிழக்குப் பகுதியில் உள்ள Woodbine Beach கடற்கரை நடைபாதைக்கு (boardwalk) அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Lake Shore Boulevard East பகுதிக்கு தெற்கிலும், Woodbine Avenue பகுதிக்கு மேற்கிலும் அமைந்துள்ள இந்தக் கடற்கரைப் பகுதியில், இரவு 9 மணிக்கு சற்று முன்பாக மோதல் ஒன்று இடம்பெறுவதாக றொரண்டோ பொலிஸாருக்கு (Toronto Police Service) தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அவசரக்காலப் பிரிவினர், காயமடைந்த நிலையில் ஒருவரைக் மீட்டனர்.
அவருக்கு உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அவசர மருத்துவ உதவிப் பிரிவினர் (Toronto Paramedic Services) தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், லேசான காயங்களுடன் இரண்டாவது நபர் ஒருவரும் கண்டறியப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.
இந்த மோதலுக்கான பின்னணி மற்றும் சந்தேக நபர்கள் எவரும் தேடப்படுகிறார்களா என்பது குறித்த விபரங்களை றொரண்டோ பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.










