Winners fitting room களில் இரகசியமாக வீடியோ பதிவு? இரு வேறு சந்தேகநபர்கள் கைது

Oakville-இல் உள்ள ஒரே Winners கடையை மையமாகக் கொண்டு இடம்பெற்றதாகக் கூறப்படும் இரண்டு தனித்தனி இரகசிய வீடியோ பதிவு சம்பவங்களில், இரண்டு வெவ்வேறு ஆண்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

முதலாவது விசாரணையில், 36 வயதான Mississauga-வைச் சேர்ந்த Dishanth Srideva மீது இரண்டு voyeurism குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2026 ஏப்ரல் மாத ஆரம்பத்தில், Oakville-இல் உள்ள Winners கடையின் fitting room-இல் ஆடை மாற்றிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை கைப்பேசி மூலம் ஒருவர் பதிவு செய்ததாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்தது. விசாரணையில், அதே கடையில் 2024 நவம்பரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மற்றொரு சம்பவத்துடனும் சந்தேகநபர் தொடர்புபடுத்தப்பட்டார்.

மே 16ஆம் திகதி Mississauga வீட்டொன்றில் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலில் கைப்பேசிகள் மற்றும் laptop உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டதுடன், Srideva கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்த விசாரணையில், Toronto-வில் உள்ள Winners கடைகளிலும் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதற்கிடையில், அதே Oakville Winners கடையில் மற்றுமொரு தனியான சம்பவம் பதிவாகியுள்ளது.

ஜூலை 22ஆம் திகதி fitting room-இல் ஆடை மாற்றிக்கொண்டிருந்த பெண்ணை, ஒருவர் தனது கைப்பேசி மூலம் பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதனை கவனித்த பெண் அந்த நபரை நேரடியாக எதிர்கொண்ட நிலையில், அவர் பொலிஸார் வருவதற்கு முன்னர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

விசாரணையைத் தொடர்ந்து 34 வயதான Mississauga-வைச் சேர்ந்த Jeffrey Abou-Mechrek அடையாளம் காணப்பட்டு, ஜூலை 27ஆம் திகதி Oakville-இல் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஒரு voyeurism குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக Halton பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த இரண்டாவது விசாரணையிலும் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கக்கூடும் என பொலிஸார் கவலை வெளியிட்டுள்ளனர்.

cp24
cp24

Related Articles

Latest Articles