WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!

கனடாவின் WestJet விமான நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் வேலைநிறுத்தம் புதிய தற்காலிக ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.

இருந்தபோதிலும், ஆயிரக்கணக்கான பயணிகள் தாயகம் திரும்ப முடியாமல் இன்னமும் வெளிநாடுகளில் தவித்து வருகின்றனர்.

900-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், மேலதிக தங்குமிடம் மற்றும் பயணச் செலவுகளுக்காகப் பயணிகள் பெருந்தொகையை இழந்துள்ளனர்.

Manitoba-வைச் சேர்ந்த Santos குடும்பத்தினர் Iceland வழியே பயணித்தபோது விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் தங்குமிடம் மற்றும் வாகனக் கட்டணங்களுக்காக இவர்கள் $4,000 டொலர்களுக்கு மேல் செலவிட்டுள்ளனர்.

அதேபோல், Scotland-இன் Edinburgh நகரில் சிக்கித் தவிக்கும் Alexander Peace குடும்பத்தினருக்கு மாற்று விமானங்கள் சரியாக முன்பதிவு செய்யப்படாததால், விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், Mexico-வில் சிக்கியிருக்கும், Mariana Lucas தம்பதியருக்கு U.S. (San Francisco) வழியாக மாற்றுப் பாதை வழங்கப்பட்டது. ஆனால், விசா கட்டுப்பாடு காரணமாக அவர்களால் அந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியவில்லை.

இதற்கு மத்தியில் WestJet வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்வது கடினமாக உள்ளதாக பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே,  WestJet  நிறுவனம் உடனடியாக மாற்று ஏற்பாடு செய்து தரவில்லை எனில், பயணிகள் சுயமாகத் பயணச்சீட்டை வாங்கிவிட்டு அதற்கான கட்டணத்தை நிறுவனத்திடம் கோரலாம் என பயணிகள் உரிமை ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Related Articles

Latest Articles