WestJet வாடிக்கையாளர் சேவையின் பெயரில் மோசடி: $3,000 பணத்தை இழந்த ஒன்றாரியோ பெண்!

விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதி என நம்பி, சமூக வலைத்தளம் ஊடாக தொடர்புகொண்ட ஒன்றாரியோவைச் சேர்ந்த பெண் ஒருவர், $3,000 டொலர்களை இழந்து மோசடிக்கு உள்ளாகியுள்ளார்.

Fonthill பகுதியைச் சேர்ந்த Traci Healy என்பவர், Vancouver பகுதியிலிருந்து Toronto திரும்பும் வழியில் தனது இணைப்பு விமானத்தைத் (Connecting Flight) தவறவிட்டுள்ளார்.

இதனால் ஏற்பட்ட விரக்தியில், WestJet இன் அதிகாரப்பூர்வ Facebook பக்கத்தில் கருத்துப் பதிவிட்டிருந்தார்.

உடனடியாக அவரைத் தொடர்புகொண்ட மர்ம நபர்கள், தாங்கள் WestJet ஊழியர்கள் எனக் கூறி, விமானக் கட்டணத்தை மீளத் தருவதாக (Refund) நம்ப வைத்துள்ளனர்.

அவர்களின் வார்த்தைகளை நம்பி வங்கி மற்றும் கடன் அட்டை (Credit Card) விவரங்களை அளித்தபோது, அவரது கணக்கிலிருந்து $3,000 டொலர்கள் திருடப்பட்டுள்ளது.

Kenya-வைச் சேர்ந்த நபர் ஒருவரே இந்த மோசடியைச் செய்துள்ளதாக பின்னர் தெரியவந்தது.

இது குறித்து விளக்கமளித்துள்ள WestJet நிறுவனம், தங்களின் அதிகாரப்பூர்வமற்ற பக்கங்கள் அல்லது தனிப்பட்ட குறுஞ்செய்திகள் மூலமாக ஒருபோதும் பயணிகளின் தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோ கோருவதில்லை எனத் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களின் கமெண்ட் பகுதிகளைக் கண்காணித்து குற்றவாளிகள் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபடுவதால், நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ தொலைபேசி எண்கள் வழியே மட்டுமே தொடர்புகொள்ளுமாறு இணைய பாதுகாப்பு நிபுணர் Claudiu Popa எச்சரித்துள்ளார்.

Video thumbnail
Mississauga அடுக்குமாடிக் கட்டிடத்தில் சந்தேகத்திற்கிடமான தீ – 11 பேர் மருத்துவமனையில்!
01:01
Video thumbnail
Pickering அணு உலைகள் 10 ஆண்டுகளுக்கு நிறுத்தம்! $26.8 பில்லியன் திட்டம்!
01:43
Video thumbnail
Scarborough வாகனத் தரிப்பிடத்தில் வீடற்றவர்களுக்கு புதிய குடியிருப்பு!
01:55
Video thumbnail
Alberta பிரிவினை: Calgary சபையிலும் பிளவு!
01:20
Video thumbnail
Alberta பிரிவினை: வாக்கெடுப்புக்குப் பின்னும் தொடரும் பிரிவினை விவாதம்!
01:06
Video thumbnail
100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய காட்டுப்பூனை இனம் கண்டுபிடிப்பு!
01:25
Video thumbnail
ஒன்ராறியோவில் சூதாட்டப் பாதிப்பு - அவசர சிகிச்சைக்கு வருவோர் இரட்டிப்பு!
01:23
Video thumbnail
GO ரயிலில் மது அருந்தி தொந்தரவு! 3 சிறுமிகள் மீது குற்றச்சாட்டு!
01:16
Video thumbnail
மழை குறைகிறது! Toronto Weekend Weather
01:10
Video thumbnail
Greenland-இல் அமெரிக்காவுக்கு நிரந்தர அதிகாரம்?
01:49

Related Articles

Latest Articles