University of Toronto-வில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளதால், புதிய கல்வியாண்டின் தொடக்கத்தில் மாணவர்களிடையே கவலை அதிகரித்துள்ளது.
University of Toronto-வில் பணியாற்றும் 6,100-க்கும் மேற்பட்ட நிர்வாக மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், வாக்களித்தவர்களில் 96 சதவீதம் பேர் வேலைநிறுத்த அதிகாரத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதில் IT ஊழியர்கள், undergraduate மற்றும் graduate program coordinators, academic advisors, lab assistants உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
தற்போதைய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கான காலக்கெடு செவ்வாய்க்கிழமை அதிகாலை முடிவடையவுள்ளது.
இதனால், செப்டம்பர் 8ஆம் திகதி மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பமாகும் முதல் நாளிலேயே தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தை அறிவிக்கக்கூடிய சட்டபூர்வ நிலைக்கு வருகிறது.
பணி பாதுகாப்பு, அதிகரித்துள்ள பணிச்சுமை, சம்பள உயர்வு, மருத்துவ நலன்கள், Remote Work மற்றும் AI பயன்பாடு தொடர்பான ஊழியர் பாதுகாப்பு ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக முன்வைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறும் ஊழியர்களுக்குப் பதிலாக புதியவர்களை நியமிக்காமல் செலவுகளை குறைக்கும் திட்டம், ஏற்கனவே உள்ள ஊழியர்களின் பணிச்சுமையை மேலும் அதிகரிக்கும் என தொழிற்சங்கம் எச்சரிக்கிறது.
இந்நிலையில் உடன்பாடு எட்டப்படுமா, அல்லது வகுப்புகள் ஆரம்பிக்கும் நாளிலேயே வேலைநிறுத்தம் தொடங்குமா என்பதே தற்போது முக்கிய கேள்வியாகியுள்ளது.
