டொரண்டோ நகரில் TTC பேருந்தில் இரண்டு பாலியல் தொல்லை சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் புகைப்படத்தை டொரண்டோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
முதல் சம்பவம் மே 1-ஆம் திகதி பிற்பகல் வேளையில் நடந்துள்ளது. பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு அருகில் நின்று, சந்தேகநபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இரண்டாவது சம்பவம் மே 15-ஆம் திகதி நடந்துள்ளது. பேருந்திலிருந்து இறங்கும் நேரத்தில், மற்றொரு பெண் பயணியிடம் தொல்லை செய்ததாக பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர் 5 அடி 4 அங்குலம் உயரமான பருமனான உடலமைப்பைக் கொண்டவர் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் பொலிசாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#TorontoCrime #TTCSafety #SexualAssault #TorontoPolice #TTCBus #CrimeAlert