Trump உடன் Trade Deal நெருங்குகிறதா? — U.S. மதுபானத் தடையை நீக்க Carney கோரிக்கை!

அமெரிக்க மதுபானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி, அவற்றை மீண்டும் கடைகளில் விற்பனைக்கு அனுமதிக்குமாறு கனடாவின் மாகாண முதல்வர்களிடம் பிரதமர் Mark Carney கோரிக்கை விடுத்துள்ளார்.

கனடா – அமெரிக்கா இடையே புதிய வர்த்தக உடன்படிக்கையை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் Mark Carney புதன்கிழமை கனடாவின் மாகாண முதல்வர்களுடன் நடத்திய சந்திப்பின்போது, அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மதுபானங்களை மீண்டும் மாகாண மதுபானக் கடைகளில் விற்பனைக்கு அனுமதிப்பது குறித்து கேட்டுக்கொண்டுள்ளார். 

அமெரிக்க அதிபர் Donald Trump கடந்த ஆண்டு கனடிய பொருட்கள் மீது வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, Ontario உள்ளிட்ட பல மாகாணங்கள் அமெரிக்க wine, beer மற்றும் spirits உள்ளிட்ட மதுபானங்களை அரச மதுபானக் கடைகளிலிருந்து அகற்றியிருந்தன. தற்போது கனடாவின் 10 மாகாணங்களில் எட்டு மாகாணங்களில் அமெரிக்க மதுபானங்களுக்கு தடை அல்லது கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. 

ஆனால் இங்கு முக்கியமான விடயம் என்னவென்றால், அமெரிக்க மதுபானங்களை மீண்டும் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என்று பிரதமர் Carney கோரிக்கை விடுக்க முடியுமே தவிர, மாகாணங்களுக்கு நேரடியாக உத்தரவிட முடியாது. மதுபான விற்பனை தொடர்பான முடிவுகளை ஒவ்வொரு மாகாண அரசும் தனித்தனியாக எடுக்க வேண்டும்.

இதற்கிடையில், கனடா–அமெரிக்கா வர்த்தக உடன்படிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இரு தரப்பும் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா கனடாவில் தயாரிக்கப்படும் கார்கள் மற்றும் டிரக்குகள் மீதான அதிகபட்ச வரியை 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும், கனடிய steel மற்றும் aluminum மீதான அதிகபட்ச வரி 50 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகக் குறைக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இவை இன்னும் இறுதி செய்யப்பட்ட நிபந்தனைகள் அல்ல.

அதேவேளை, சுமார் 20 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள கனடிய பொருட்கள் மீது 50 சதவீத புதிய வரிகளை அமுல்படுத்துவதை Trump நிர்வாகம் சனிக்கிழமை வரை ஒத்திவைத்துள்ளது. இரு நாடுகளும் அதற்கு முன்னர் உடன்பாட்டை இறுதி செய்ய முயற்சித்து வருகின்றன.

Nova Scotia Premier Tim Houston, ஒரு இறுதி வர்த்தக உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் அமெரிக்க மதுபானங்களை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவருவது தொடர்பான நடைமுறையை முன்னெடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Ontario Premier Doug Ford-மும் முன்னதாக, கனடாவின் steel, auto, forestry, agriculture மற்றும் manufacturing துறைகளை பாதுகாக்கும் நியாயமான வர்த்தக உடன்பாடு கிடைத்தால் அமெரிக்க மதுபானங்களை மீண்டும் Ontario கடைகளுக்கு கொண்டுவரத் தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.

Related Articles

Latest Articles