கனடா–அமெரிக்க வர்த்தக மோதலின் தாக்கம் தற்போது Quebec-ல் தயாரிக்கப்படும் வாகனங்களையும் நேரடியாக பாதிக்கத் தொடங்கியுள்ளது.
Quebec-ஐ தலைமையிடமாகக் கொண்ட BRP நிறுவனத்தின் Can-Am Spyder மற்றும் Can-Am Canyon ஆகிய மூன்று சக்கர வாகனங்கள், September 29 முதல் அமெரிக்க சந்தைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது என நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த இரண்டு வாகனங்களும் Quebec-இன் Valcourt பகுதியில் தயாரிக்கப்படுகின்றன.
அமெரிக்க அதிபர் Donald Trump அறிவித்துள்ள கனடிய பொருட்களுக்கு எதிரான புதிய வர்த்தக கட்டுப்பாடுகளின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், உடனடியாக பெரிய நிதி பாதிப்பு ஏற்படாது என BRP தெரிவித்துள்ளது.
காரணம், தற்போதைய பருவத்துக்கான பெரும்பாலான வாகன உற்பத்தியும் அமெரிக்காவுக்கான ஏற்றுமதியும் ஏற்கனவே முடிவடைந்துள்ளன.
ஆனால் கனடா அமெரிக்க வர்த்தகப் போர் தொடர்ந்து தீவிரமடைந்தால், Quebec-ன் வாகன உற்பத்தித் துறைக்கு நீண்டகால பாதிப்புகள் ஏற்படுமா என்ற கவலை எழுந்துள்ளது.
இதற்கிடையில் Quebec-ஐ சேர்ந்த மற்றொரு முக்கிய நிறுவனமான Bombardier-க்கும் Donald Trump எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Bombardier தனது விமானங்களை அமெரிக்காவிலேயே தயாரிக்காவிட்டால், அந்த நிறுவனத்தின் விமானங்களை U.S. சந்தையில் விற்பனை செய்வதைத் தடுக்கலாம் என அவர் கூறியுள்ளார்.
