அமெரிக்க அதிபர் Donald Trump விதித்த “சுதந்திர தின” (Liberation Day) வரிகள் சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வரியைத் திருப்பித் தருமாறு சர்வதேச வர்த்தக நீதிமன்ற நீதிபதி Richard Eaton புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
IEEPA சட்டத்தைப் பயன்படுத்தி கனடா (Canada), மெக்சிகோ (Mexico) மற்றும் சீனா (China) மீது விதிக்கப்பட்ட வரிகள், அமெரிக்க அரசியலமைப்பிற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பளித்தது.
இந்த சட்டவிரோத வரியைச் செலுத்திய அனைத்து இறக்குமதியாளர்களும் வட்டி வசூலுடன் பணத்தைப் திரும்பப் பெற தகுதியுடையவர்கள் என நீதிபதி Richard Eaton தெரிவித்துள்ளார்.
டிசம்பர் நடுப்பகுதி வரை சுமார் 130 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (US$130 billion) இந்த வரிகள் மூலம் வசூலிக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
கனடா பெரும்பாலும் CUSMA ஒப்பந்தத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டாலும், பெண்டானில் (fentanyl) விவகாரத்திற்காக விதிக்கப்பட்ட 35% வரியால் பாதிக்கப்பட்ட சில கனடிய நிறுவனங்களுக்கு இந்தத் தீர்ப்பு நன்மையளிக்கும்.
