கனடா–அமெரிக்க வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், Alberta-வின் தற்போதைய Premier Danielle Smith மற்றும் முன்னாள் Premier Jason Kenney ஆகியோர் கனடாவின் அடுத்த நடவடிக்கை குறித்து மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்காவின் புதிய வரிகளுக்கு பதிலாக கனடா செப்டம்பர் 8 முதல் எதிர்-வரிகளை விதிக்கத் தயாராகி வருகிறது.
ஆனால் Alberta Premier Danielle Smith இதுகுறித்து எச்சரித்துள்ளார்.
அமெரிக்க வரிகள் காரணமாக சுமார் $1.5 பில்லியன் மதிப்புள்ள Alberta பொருட்கள் பாதிக்கப்படும் நிலையில், கனடாவின் எதிர்வரிகள் மூலம் சுமார் $4.8 பில்லியன் மதிப்புள்ள இறக்குமதிகள் Alberta வணிகங்களை பாதிக்கக்கூடும் என அவர் கூறுகிறார்.
மீண்டும் பேச்சுவார்த்தைக்கு சென்று வரிகளை முடிந்தவரை குறைக்க வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார்.
ஆனால் முன்னாள் Alberta Premier Jason Kenney வேறுபட்ட கருத்தை முன்வைக்கிறார்.
சில Conservative எம்.பி.க்கள் இந்த வர்த்தகப் போருக்கு காரணமானவர் Donald Trump என்பதை இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், அமெரிக்கா மேலும் அழுத்தம் கொடுத்தால், கனடாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதிகளையும் ஒரு negotiation tool-ஆக வைத்திருக்க வேண்டும் என்பதும் Kenney-யின் கருத்தாகும்.
