Toronto-வை அச்சுறுத்தும் Lithium Battery தீ! — 2026ல் மட்டும் 97 சம்பவங்கள்

Toronto-வில் Lithium-ion battery காரணமாக ஏற்படும் தீ விபத்துகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்து வருகின்றன.

2026ஆம் ஆண்டில் இதுவரை மட்டும் Toronto நகரில் 97 lithium-ion battery தொடர்பான தீ விபத்துகள் பதிவாகியுள்ளதாக Toronto Fire Services தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்துகளால் இந்த ஆண்டில் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

குறிப்பாக E-bike மற்றும் E-scooter-களில் பயன்படுத்தப்படும் lithium-ion batteries தொடர்பான தீ விபத்துகள் வேகமாக அதிகரித்து வருவதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

தரச்சான்று இல்லாத batteries, சேதமடைந்த batteries, அதிக நேரம் charge செய்வது, battery-யில் மாற்றங்களைச் செய்வது மற்றும் அதற்குப் பொருந்தாத charger-ஐ பயன்படுத்துவது போன்றவை முக்கிய காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

Lithium-ion battery ஒன்று “thermal runaway” நிலைக்கு சென்றால், தீ மிக வேகமாகவும் தீவிரமாகவும் பரவக்கூடும்.

இத்தகைய தீ விபத்துகளின்போது நச்சுத்தன்மை கொண்ட புகை மற்றும் ஆபத்தான இரசாயனப் பொருட்களும் வெளியேறக்கூடும்.

இதனால் Lithium-ion batteries தொடர்பாக கடுமையான பாதுகாப்பு விதிமுறைகளை விரைவாக அமல்படுத்த Ontario மற்றும் Federal அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என Toronto Fire Services வலியுறுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles