கோடைக்காலத்தின் மிகவும் பரபரப்பான வார இறுதிகளில் ஒன்றாக இருக்கும் இந்த வார இறுதியில், Toronto மற்றும் GTA-வை கனமழை தாக்கக்கூடும் என Environment Canada எச்சரித்துள்ளது.
சனிக்கிழமை காலை முதல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை சில பகுதிகளில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக சனிக்கிழமை பிற்பகுதியில் Toronto பகுதியில் மழை தீவிரமடையக்கூடும் என்பதுடன், இடியுடன் கூடிய மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியில் பல பெரிய நிகழ்ச்சிகள், இசை நிகழ்வுகள், கோடைக்கால விழாக்கள் நடைபெறவுள்ளதால், நகரத்தில் பெருமளவான மக்கள் நடமாட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.
