Toronto Pearson Airport வழியாக நீங்கள் சென்றிருந்தால், பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் நிற்கும் இந்தப் பிரமாண்ட விமானத்தை பார்த்திருக்கலாம்!
இது சாதாரண விமானம் அல்ல. ரஷ்ய சரக்கு விமான நிறுவனமான Volga-Dnepr Airlines-க்கு சொந்தமான Antonov An-124.
2022 பெப்ரவரியில் ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை ஆரம்பித்ததைத் தொடர்ந்து, கனடா ரஷ்யப் பதிவுடைய விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடியது.
அந்த நேரத்தில் Toronto Pearson-ல் இருந்த இந்த விமானம் அங்கிருந்து புறப்பட முடியாமல் சிக்கிக்கொண்டது.
பின்னர் 2023-ல் இந்த விமானத்தை கனடிய அரசு கைப்பற்றியது.
தங்கள் மீதான தடைகளை நீக்குமாறு Volga-Dnepr நிறுவனம் கோரியிருந்த நிலையில், தற்போது Federal Court அந்தக் கோரிக்கையையும் நிராகரித்துள்ளது.
நிறுவனம், “2018 முதல் இராணுவ சரக்குகளை எடுத்துச் செல்லவில்லை; உக்ரைன் போரில் எங்களுக்கு தொடர்பில்லை” என வாதிட்டது.
ஆனால் ரஷ்ய அரசின் ஒப்பந்தங்கள் மற்றும் மானியங்களால் நிறுவனம் பயனடைந்ததாக கனடிய அரசு தெரிவித்துள்ளது. நீதிமன்றமும் தடைகளை நீக்குவதற்கான நிறுவனத்தின் வாதத்தை ஏற்கவில்லை.
இதனால் நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாக Pearson-ல் நிற்கும் இந்தப் பிரமாண்ட விமானம், இப்போதைக்கு அங்கேயே தொடர்கிறது.
மேலும், விமானம் இறுதியாக கனடாவின் சொத்தாக மாறினால், அதனை உக்ரைனுக்கு ஆதரவாக பயன்படுத்துவது குறித்தும் கனடா திட்டமிட்டுள்ளது.
