Markham-ஐ அதிரவைத்த தொடர் பாலியல் தாக்குதல்கள் – 22 வயது நபர் கைது

York Regional Police தகவலின்படி, Markham நகரில் ஒரு வார காலப்பகுதிக்குள் இடம்பெற்றதாகக் கூறப்படும் நான்கு பாலியல் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் 22 வயது நபர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவங்கள் அனைத்தும் மாலை நேரங்களில் Edward Jeffreys Avenue பகுதியில், Markham Road மற்றும் Roy Rainey Avenue இடையே இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு சம்பவத்திலும் தொடர்புடைய நபர் சைக்கிளில் பயணித்ததாக விசாரணையாளர்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பில் Markham-ஐச் சேர்ந்த 22 வயதான Abdul Basit Raufi, ஆகஸ்ட் 20 அன்று கைது செய்யப்பட்டார்.

அவர் மீது நான்கு பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகளும், அடையாளத்தை மறைக்கும் நோக்குடன் மாறுவேடம் அணிந்ததாக ஒரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கக்கூடும் என நம்பும் பொலிஸார், கைது செய்யப்பட்டவரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

அவருக்கு Brampton பகுதியுடனும் தொடர்புகள் இருப்பதாகவும், சம்பவங்களின்போது தனது தோற்றத்தை மாற்றியிருக்கலாம் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Latest Articles