Toronto Islands’ போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

Toronto Islands-க்கு செல்லும் Ferry Tickets வாங்கும்போது பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு City of Toronto எச்சரிக்கை விடுத்துள்ளது.

City of Toronto வின் பெயரைப் பயன்படுத்தி, போலியான Ferry பயணச்சீட்டுகளை விற்பனை செய்யும் மோசடி இணையதளங்கள் தொடர்பாக தங்களுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக City of Toronto தெரிவித்துள்ளது.

இந்த இணையதளங்கள் முற்றிலும் போலியானவை என்றும், Ferry Tickets-ஐ toronto.ca/ferry என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வாங்குமாறும் City of Toronto அறிவுறுத்தியுள்ளது.

City of Toronto வின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரிகளில் “toronto.ca” என்ற பெயர் கட்டாயமாக இடம்பெறும் என்றும் பொதுமக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்களுக்கு Toronto Ferry பயணம் இலவசமாக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Toronto மேயர் Olivia Chow மற்றும் துணை மேயர் Ausma Malik ஆகியோர் முன்வைத்த தீர்மானம், ஜூலை 30ஆம் திகதி Toronto நகர சபையில் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, ஆகஸ்ட் மாதம் முழுவதும் குறிப்பிட்ட வயதுப் பிரிவினருக்கு இலவச Ferry பயண வசதி வழங்கப்படுகிறது.

எனவே, Toronto Islands-க்கு செல்ல திட்டமிட்டுள்ளவர்கள், போலி இணையதளங்களில் சிக்காமல், அதிகாரப்பூர்வ City of Toronto  இணையதளத்தின் மூலம் மட்டுமே Ferry Tickets தொடர்பான தகவல்களைப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles