Toronto-வில் பயங்கரம் – வீடுபுகுந்து கொள்ளையிடும் கும்பல் அட்டகாசத்தினால் நபரொருவர் படுகாயம்!

கனடா Toronto நகரில் அதிகாலையில் நடந்த வன்முறை கலந்த வீடுபுகுந்து கொள்ளையிடும் (Home Invasion) முயற்சியில் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.

புதன்கிழமை அதிகாலை சுமார் 2:20 மணியளவில், Glencairn Avenue மற்றும் Rosewell Avenue சந்திப்பிற்கு அருகில் உள்ள 153 Glencairn Avenue இல்லத்திற்குள் ஐந்து மர்ம நபர்கள் பலவந்தமாக நுழைந்துள்ளனர்.

வீட்டில் ஒரு குடும்பம் இருந்த நிலையில், கொள்ளையர்கள் பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளனர். இந்த மோதலின் போது, அங்கிருந்த ஒரு நபர் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.

படுகாயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தில்லாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொள்ளையர்கள் ஏதாவது பொருட்களை எடுத்துச் சென்றார்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இச்சம்பவம் குறித்து 680 NewsRadio-விற்கு தகவல் வழங்கிய காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வருவதோடு, சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Articles

Latest Articles