Toronto-வில் Legionnaires’ நோய் எனப்படும் கடுமையான நுரையீரல் தொற்று பரவல் தொடர்பாக சுகாதார அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
Toronto Public Health வெளியிட்டுள்ள தகவலின்படி, Bathurst Street மற்றும் Dupont Street சந்திப்பைச் சுற்றிய சுமார் ஒரு கிலோமீட்டர் பகுதியில், இதுவரை 6 பேருக்கு Legionnaires’ நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நோய் உறுதி செய்யப்பட்டவர்கள் இந்தப் பகுதியில் வசித்தவர்கள், வேலை செய்தவர்கள் அல்லது இங்கு வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு கடந்த ஜூலை 2 முதல் ஜூலை 26ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.
இதற்கான சாத்தியமான தொற்று மூலங்களை சுகாதார அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளபோதிலும், எந்த இடத்திலிருந்து தொற்று பரவியது என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
சுற்றுச்சூழல் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைக்கு பொதுமக்களுக்கான அபாயம் குறைவாகவே உள்ளது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Legionnaires’ நோய் என்பது Legionella bacteria காரணமாக ஏற்படும் கடுமையான pneumonia — அதாவது நுரையீரல் தொற்றாகும். இது பொதுவாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுவதில்லை.
மாறாக, cooling towers, hot tubs, hot-water systems அல்லது decorative fountains போன்ற இடங்களில் Legionella bacteria வளர்ந்து, அவற்றிலிருந்து உருவாகும் மிகச் சிறிய நீர்த்துளிகளை சுவாசிக்கும்போது தொற்று ஏற்படக்கூடும்.
காய்ச்சல், குளிர், தலைவலி, இருமல், மூச்சுத்திணறல், பசியின்மை மற்றும் சிலருக்கு வயிற்றுப்போக்கு போன்றவை இதன் அறிகுறிகளாக இருக்கலாம்.
குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், புகைப்பிடிப்பவர்கள், நீண்டகால நுரையீரல் நோய் அல்லது பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.
