Toronto-வில் Chow-வின் புதிய TAX வாக்குறுதி!

மீண்டும் Toronto Mayor ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், Property Tax உயர்வை பணவீக்க விகிதமான Inflation-க்கு சமமாக அல்லது அதற்கு அருகில் வைத்திருக்கத் திட்டமிட்டுள்ளதாக Mayor Olivia Chow-வின் தேர்தல் பிரசாரக் குழு அறிவித்துள்ளது.

Olivia Chow 2023-ல் Mayor ஆக பதவியேற்றபோது, Toronto நகரம் சுமார் 1.8 பில்லியன் டொலர் அளவிலான Budget பற்றாக்குறையை எதிர்கொண்டதாக அவரது தரப்பு கூறுகிறது.

அதன்பின்னர் Toronto வீட்டு உரிமையாளர்கள் குறிப்பிடத்தக்க Property Tax உயர்வுகளை சந்தித்தனர்.

2024-ல் Property Tax 9.5 சதவீதம் உயர்ந்தது. 2025-ல் அது 6.9 சதவீதமாக இருந்தது.

ஆனால் 2026-ல் Property Tax மற்றும் City Building Fund levy ஆகியவற்றை சேர்த்த மொத்த உயர்வு 2.2 சதவீதமாக குறைந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் நகரத்தின் நிதிநிலையை மேம்படுத்த எடுத்த நடவடிக்கைகளுக்குப் பிறகு, Toronto தற்போது நிலையான நிதிநிலையை நோக்கிச் சென்றுள்ளதாக Chow-வின் பிரசாரக் குழு தெரிவிக்கிறது.

ஆனால் அவரது எதிரணியினர் இந்த வாக்குறுதியை விமர்சித்துள்ளனர்.

Mayor பதவிக்கு போட்டியிடும் Brad Bradford, கடந்த தேர்தலில் “மிதமான” வரி உயர்வுகள் என கூறிய Chow, பின்னர் பெரிய அளவில் வரிகளை உயர்த்தியதாகக் கூறி, இந்த புதிய வாக்குறுதியையும் வாக்காளர்கள் நம்ப வேண்டுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு வேட்பாளரான Chris Alexander, தான் Mayor ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் தனது முதல் ஆண்டில் Property Tax உயர்வே இருக்காது என்றும், இரண்டாவது ஆண்டில் Inflation-ஐ விட குறைவான உயர்வையே கொண்டுவருவதாகவும் அறிவித்துள்ளார்.

இதனால் Toronto Mayor தேர்தலில் Property Tax தற்போது முக்கிய தேர்தல் விவகாரமாக மாறியுள்ளது.

Toronto மாநகரத் தேர்தல் October 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Related Articles

Latest Articles