Toronto-வில் வாடகை வீடுகளின் விலை சரிவு: வாடகைதாரர்களுக்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு!

கனடாவின் Toronto நகரில் வீட்டு வாடகை விலைகள் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவதாக புதிய ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Rentals.ca மற்றும் Urbanation வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த பிப்ரவரி மாதம் சராசரி வாடகை $2,482 ஆகக் குறைந்துள்ளது.

இது கடந்த 2025-ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5.3 சதவீத வீழ்ச்சியாகும்.

குறிப்பாக, ஸ்டுடியோ (Studio) வீடுகளின் வாடகை 7.9 சதவீதமும், ஒரு படுக்கையறை கொண்ட வீடுகளின் வாடகை 6.9 சதவீதமும் சரிந்துள்ளன.

புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் வருகை அதிகரித்துள்ளதே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்களைக் கவர வீட்டு உரிமையாளர்கள் சில மாதங்கள் இலவச வாடகை அல்லது இலவச வாகன நிறுத்தம் (Parking) போன்ற சலுகைகளையும் வழங்கி வருகின்றனர்.

2026-ஆம் ஆண்டு முழுவதும் வீடுகளின் விநியோகம் (Supply) அதிகமாக இருக்கும் என்பதால், விலை மீண்டும் உயர்வதற்கான வாய்ப்பு குறைவு என நிபுணர்களும் தெரிவித்துள்ளார்.

 இதனால் இளைய தலைமுறையினர் புதிய வசதிகளுடன் கூடிய வீடுகளைக் குறைந்த விலையில் தேடி இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.

Image – cp24 

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles