Torontoவில் அண்மையில் பதிவான Legionnaires’ disease — லெஜியனேர்ஸ் நோய் பரவலுக்கான மூல காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Toronto Public Health நடத்திய விசாரணையில், Bathurst Street மற்றும் Dupont Street சந்திப்புக்கு அருகிலுள்ள TTC-யின் Hillcrest Complex-இல் அமைந்துள்ள cooling tower ஒன்றே இந்த நோய் பரவலுக்கான மூலமாக இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்திற்குள் வசித்த, வேலை செய்த அல்லது அங்கு சென்ற ஆறு பேருக்கு Legionnaires’ disease உறுதி செய்யப்பட்டிருந்தது. இவர்களுக்கு July 2 முதல் July 26 வரையான காலப்பகுதியில் நோய் அறிகுறிகள் ஏற்பட்டிருந்ததாக Toronto Public Health தெரிவித்துள்ளது.
TTC Hillcrest Complex cooling tower-ல் நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த cooling tower தான் பரவலுக்கான மூல காரணம் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
பாதிக்கப்பட்ட cooling equipment உடனடியாக செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும், சுத்திகரிப்பு மற்றும் தேவையான திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Legionnaires’ disease என்பது Legionella bacteria காரணமாக ஏற்படக்கூடிய கடுமையான நுரையீரல் தொற்று — pneumonia வகை நோயாகும்.
தற்போது பொதுமக்களுக்கான அபாயம் குறைவாகவே உள்ளது என Toronto Public Health தெரிவித்துள்ளது.
