அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை “Loser” என கடுமையாக விமர்சித்த Ontario Premier Doug Ford, மறுநாளே தனது பேச்சின் தொனியை மென்மையாக்கியுள்ளார்.
Canada–U.S. வர்த்தகப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், திங்கட்கிழமை Doug Ford மற்றும் Donald Trump இடையே கடுமையான வார்த்தைப் போர் வெடித்தது.
ஆனால் செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த Ford, இரு தரப்பும் தற்போது பதற்றத்தைத் தணிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
“நேற்று ஜனாதிபதிக்கும் எனக்கும் இடையிலான விவகாரம் கொஞ்சம் தனிப்பட்டதாக மாறிவிட்டது. ஆனால் அமெரிக்க மக்களுக்கும் கனடியர்களுக்கும் நல்லதொரு ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று Ford கூறியுள்ளார்.
இதற்கு ஒரு நாளுக்கு முன்னர் நிலைமை முற்றிலும் வேறாக இருந்தது.
Donald Trump தனது Truth Social பதிவில் Doug Ford-ஐ கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், Doug Ford அவருக்கு பதில் விமர்சனம் விடுத்ததோடு, Canada மீது மேலும் வரிகள் விதித்தால் கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
மேலும் Ontario-விலிருந்து Michigan, New York, Minnesota மாநிலங்களுக்கு அனுப்பப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் விதிப்பது அல்லது மின்சார விநியோகத்தை நிறுத்துவது உட்பட அனைத்து வாய்ப்புகளும் பரிசீலனையில் உள்ளதாகவும் அவர் எச்சரித்திருந்தார்.
இருப்பினும் தற்போது தனது நிலைப்பாட்டை மென்மையாக்கிய Doug Ford, “ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதைவிட இணைந்து செயல்பட்டால்தான் இரு நாடுகளும் வலுவாக இருக்கும்” என்ற கருத்தை முன்வைத்துள்ளார்.










