Canada-வின் Surrey பகுதியில் உள்ள Panorama Ridge பகுதியில் நள்ளிரவில் வீட்டின் அழைப்புமணியை அடித்துவிட்டுத் தப்பித்து ஓடும் ‘Ding-dong-ditch’ விளையாட்டில் ஈடுபட்ட நபர் ஒருவர், ஓடும் வழியில் கீழே விழுந்த சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த Julia Michel என்பவர், நள்ளிரவில் திடீரென மணி சத்தம் கேட்டதால் அச்சமடைந்து, பாதுகாப்புப் கேமரா (Security Camera) பதிவுகளைப் பார்த்துள்ளார்.
அதில், அழைப்புமணியை அடிக்க வந்த நபர் ஓடி வரும்போதே பயங்கரமாகக் கீழே விழுந்து, பின்னர் மீண்டும் எழுந்து சென்று அழைப்புமணியை அடித்துவிட்டுத் தப்பியோடிய காட்சி பதிவாகியிருந்தது.
இச்சம்பவம் குறித்து Surrey Police Service (SPS) அதிகாரி Sgt. Ali Gailus கூறுகையில், “ஒருமுறை மட்டும் நடக்கும் இத்தகைய குறும்புத்தனங்கள் மற்றும் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்காத செயல்கள் குற்றவியல் குற்றமாகக் கருதப்படாது.
இருப்பினும், நள்ளிரவில் செய்யப்படும் இதுபோன்ற செயல்கள் பொதுமக்களுக்கு தேவையற்ற அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.
முகமூடி அணிந்து வந்த அந்நபர்களை அடையாளம் காணும் நோக்கில் Julia Michel இக்காணொளியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
