வரும் மாதங்களில் டீசல் விலை லீட்டருக்கு $2க்கும் கீழ் குறைய வாய்ப்பு: எரிபொருள் துறை நிபுணர் கணிப்பு

cp24

எண்ணெய் விலைகள் சரிவடைந்து வருவதால், வரும் மாதங்களில் டீசல் விலை ஒரு லீட்டருக்கு $2க்குக் கீழ் குறைய வாய்ப்புள்ளதாக எரிபொருள் துறை நிபுணர் தெரிவித்துள்ளார்.

CTV News ஊடகத்திற்குப் பேட்டியளித்த முன்னாள் எண்ணெய் மற்றும் எரிவாயு பகுப்பாய்வாளர் Peter Linder, Middle East பகுதியில் பதற்றங்கள் தணிந்து அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கினால், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு US$85 வரை குறையக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், United States மற்றும் Iran நாடுகளுக்கு இடையிலான மோதல்கள் தீவிரமடைந்தால், எண்ணெய் விலை மீண்டும் பீப்பாய்க்கு US$100க்கும் அதிகமாக உயரக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தற்போது Russia மற்றும் Middle East நாடுகளிலிருந்து டீசல் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாலும், தேவைகள் அதிகமாக இருப்பதாலும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது.

இருப்பினும், கோடைகாலப் பயணங்கள் முடிவடைந்தது மற்றும் European நாடுகள் 100 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் மற்றும் டீசலை சந்தைக்கு வெளியிடவுள்ளமை ஆகிய காரணங்களால் விரைவில் டீசல் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக அவர் கணித்துள்ளார்.

Previous articleNorth York பகுதியில் முதியவரிடம் $5,000க்கும் அதிகமான நகைகள் திருட்டு: சந்தேகநபரைக் தேடும் Toronto பொலிஸார்
Next articleSurrey பகுதியில் ‘Ding-dong-ditch’ குறும்புத்தனம்: ஓடும் வழியில் கீழே விழுந்த நபர்!