North York பகுதியில் 80 வயதுடைய முதிய பெண் ஒருவரிடமிருந்து $5,000-க்கும் அதிகமான பெறுமதியுடைய நகைகளைக் திருடிச் சென்ற நபரை Toronto பொலிஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
கடந்த August 27 அன்று பிற்பகல் 4:15 மணியளவில் Jane Street மற்றும் Sheppard Avenue West பகுதிக்கு அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இச்சம்பவம் நடந்துள்ளது.
தான் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக (Repairs) வந்திருப்பதாகக் கூறி வீட்டின் உரிமையாளரான 80 வயது முதிய பெண்ணை நம்பவைத்து, சந்தேகநபர் வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
பின்னர் அவர் அங்கு இருந்த நகைகளைத் திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
சுமார் 30 வயதுடைய, தசைப்பிடிப்பான உடலமைப்பு (Muscular build) கொண்ட அந்நபர், கருப்பு நிற T-shirt, கருப்பு காற்சட்டை, வெள்ளை மற்றும் கருப்பு நிற காலணிகள் மற்றும் கண்ணாடி அணிந்திருந்ததாக விவரிக்கப்பட்டுள்ளது.
இவரால் மேலும் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதால், இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 416-808-3100 என்ற எண்ணிலோ அல்லது Crime Stoppers மூலமாகவோ Toronto பொலிஸாரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
