Scarborough பயணிகளுக்கு நல்ல செய்தி! முன்கூட்டியே திறக்கிறது புதிய Busway!

Scarborough-வில் தினமும் TTC பயன்படுத்தும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி!

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட Scarborough Busway, செப்டெம்பர் 30ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக திறக்கப்படவுள்ளது. திட்டமிடப்பட்ட காலத்தை விட ஆறு மாதங்களுக்கும் மேலாக முன்கூட்டியே இந்தத் திட்டம் பயன்பாட்டுக்கு வருகிறது.

சுமார் 4 கிலோமீட்டர் நீளமான இந்த Busway, மூடப்பட்ட முன்னாள் Line 3 Scarborough RT பாதையின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி Kennedy Station-இல் இருந்து Ellesmere Station வரை செல்லும். அங்கிருந்து Ellesmere Road-இன் முன்னுரிமை Bus Lane வழியாக Scarborough Town Centre-ஐ இணைக்கும்.

புதிய Busway பயன்பாட்டுக்கு வந்த பின்னர், Kennedy Station முதல் Scarborough Town Centre வரையான பயணம் சுமார் 15 நிமிடங்களில் முடியும் என TTC எதிர்பார்க்கிறது. தற்போதைய பேருந்துப் பயணத்தைவிட சுமார் 7 நிமிடங்கள் வரை சேமிக்க முடியும்.

பல TTC பேருந்து சேவைகளும் இந்த புதிய வழித்தடத்தைப் பயன்படுத்தவுள்ளன.

2023ஆம் ஆண்டு Line 3 Scarborough RT சேவை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, Scarborough பயணிகள் மாற்றுப் பேருந்துகளை நம்பியிருந்த நிலையில், இந்த புதிய Busway வேகமானதும் நம்பகமானதுமான பயணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scarborough-வின் புதிய Busway — செப்டெம்பர் 30 முதல் பயணிகளுக்காக திறக்கிறது!

Related Articles

Latest Articles