Toronto நகரின் பிரபலமான Salsa on St. Clair திருவிழாவில் இருவர் உயிரிழந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக Toronto Police Chief அறிவித்துள்ளார்.
ஜூலை 11ஆம் திகதி இரவு, இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது.
சுமார் 13,000 பேர் திருவிழாவில் இருந்த நிலையில், ஏழு பேர் துப்பாக்கிக் குண்டு தாக்குதலுக்கு ஆளாகினர். 25 வயதான Shaquan Quashie மற்றும் 20 வயதான Cesar Vernaza ஆகியோர் உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திலிருந்து இரண்டு துப்பாக்கிகளும் மீட்கப்பட்டன.
தற்போது இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். எனினும், அவர்களின் பெயர் விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
