போதைப்பொருட்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் பாலியல் தாக்குதல்கள் மற்றும் இணையவழி குற்ற நெட்வொர்க்குகளை இலக்காகக் கொண்டு நடத்தப்படும் ‘Project Medusa’ என்ற சர்வதேச கூட்டுப் பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கனடாவுடன் (Canada) தொடர்புடைய 41 பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கனடிய அரச பொலிஸார் (RCMP) தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய இராச்சியம் (United Kingdom) மற்றும் ஜெர்மனி (Germany) ஆகியவற்றின் தலைமையில், யூரோபோல் (Europol) அமைப்பின் ஆதரவுடன் நடைபெறும் இந்த சர்வதேச முயற்சியில் கனடாவும் தீவிரமாகப் பங்கேற்று வருகிறது.
இதுவரை உலகளவில் 156 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 274 புதிய புலனாய்வுத் தடயங்களும் கண்டறியப்பட்டுள்ளன.
W5 ஊடகத்தின் ‘Sleeping with the Enemy’ ஆவணப்படத்தைத் தொடர்ந்து இந்த சர்வதேச விசாரணை தீவிரமடைந்தது.
இதன் மூலம் அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரான ஹேமில்டன் (Hamilton) நகரைச் சேர்ந்த பிரையன் ஹேவார்ட் (Bryan Hayward), பாலியல் வன்கொடுமை உட்பட 21 குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதும் குற்றவாளிகளைக் கண்டறிவதுமே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என RCMP தெரிவித்துள்ளது.
