கனடாவின் றொரண்டோ (Toronto) நகரில் உள்ள நோர்த் யோர்க் (North York) பகுதியில் 29 வயதான தீ ங்குயென் (Thi Nguyen) என்ற பெண் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் Highway 404 மற்றும் Sheppard Avenue East அருகே அமைந்துள்ள Fairview Mall Drive அடுக்குமாடிக் குடியிருப்பின் மண்டபத்தில் (hallway) குறித்த பெண் தீவிர காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டார்.
தீவிர மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டபோதிலும், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற பெண்ணின் கணவரான வோன் (Vaughan) பகுதியைச் சேர்ந்த 28 வயது மார்ட்டின் லீ (Martin Ly) என்பவரை றொரண்டோ பொலிஸார் (Toronto Police) கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கணவர் மீது முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு (1st-degree murder) மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறியமை (failure to comply with an undertaking) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
