PHP இணையப் பாதுகாப்பு குறைபாடு: கனடா அரசாங்க வலைத்தளங்கள் மற்றும் முக்கிய சேவைகள் தற்காலிகமாக முடக்கம்!

இணையத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் PHP நிரலாக்க மொழியில் (Programming Language) கண்டறியப்பட்ட மிகக் கடுமையான பாதுகாப்பு குறைபாட்டை சரிசெய்யும் முயற்சியாக, கனடா (Canada) அரசாங்க வலைத்தளங்கள் உட்பட உலகளாவிய பல முக்கிய சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

சைபர் பாதுகாப்பு நிபுணர் Ritesh Kotak அவர்களின் கூற்றுப்படி, பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள 70 சதவீத வலைத்தளங்களும் பயன்பாடுகளும் PHP மொழியையே அடிப்படையாகக் கொண்டுள்ளன.

இதனால் மில்லியன் கணக்கான சர்வர்கள் ஆபத்தை எதிர்கொள்ள நேரிட்டதுடன், FBI மற்றும் ஐரோப்பிய யூனியன் (EU) சைபர் பாதுகாப்பு முகாமையானது உலகளாவிய எச்சரிக்கையை விடுத்தது.

இதன் ஒரு பகுதியாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக Montreal நகரின் போக்குவரத்துத் துறையான STM, தனது stm.info வலைத்தளத்தை தற்காலிகமாக மூடிவிட்டு, பின்னர் beta.stm.info என்ற புதிய தளத்தின் ஊடாக சேவைகளை வழங்கியது.

அதேபோல், கியூபெக் (Quebec) மாகாணத்தின் மதுபான விற்பனை நிலையமான SAQ தனது வலைத்தளத்தை முடக்கியது.

இருப்பினும், எந்தவித தரவுத் திருட்டும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.

கனடாவின் செயற்கை நுண்ணறிவு மற்றும் இலக்கவியல் புத்தாக்கத்துறை அமைச்சர் Evan Solomon, குடிமக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே கனடா அரசாங்க வலைத்தளங்கள் தற்காலிகமாக செயலமர்த்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

குறிப்பிடத்தக்க வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் OpenAI உள்ளிட்ட ஆராய்ச்சியாளர்கள் குழுவே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்தக் கடுமையான குறைபாடுகளைக் கண்டறிந்தது.

ஹேக்கர்கள் இதைப் பயன்படுத்தி தரவுகளைத் திருடுவதைத் தவிர்க்க, அவசரமாகப் பாதுகாப்புத் திருத்தங்கள் (Patches) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திருத்தங்கள் முடிந்ததும் வலைத்தளங்கள் மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles