இப்போது கடைகளில் Peach, Plum போன்ற பழங்கள் கிடைத்தாலும், அடுத்த ஆண்டு அவற்றின் விலை அதிகரிக்கக்கூடும் என்று University of Guelph நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
இதற்குக் காரணம், அண்மையில் Ontario-வின் Niagara பகுதியில் ஏற்பட்ட கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்கு.
இந்த மாதத்தின் ஆரம்பத்தில் Niagara பகுதியில் 30 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவானதைத் தொடர்ந்து, பல பண்ணைகள், பழத்தோட்டங்கள் மற்றும் திராட்சைத் தோட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
குறிப்பாக peach மற்றும் plum மரங்கள் நீண்ட நேரம் நீரில் மூழ்கிய மண்ணைத் தாங்குவதில் மிகவும் பலவீனமானவை என்றும், மரங்களின் வேர்களைச் சுற்றி நீர் நீண்ட நேரம் தேங்கி நின்றால், வேர்களுக்கு தேவையான oxygen கிடைக்காமல் மரங்கள் கடுமையாக பாதிக்கப்படலாம்; சில மரங்கள் முற்றிலும் அழிந்துவிடும் அபாயமும் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
கனடாவில் விற்பனை செய்யப்படும் peaches-இல் சுமார் 80 சதவீதம் Niagara பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அதன் காரணமாக, 2027ஆம் ஆண்டில் peaches மற்றும் plums உள்ளிட்ட சில Ontario பழங்களின் விலைகள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இது ஒரு வருடத்திற்கான பிரச்சினையாக மட்டும் இருக்காமல் போகலாம்.
கடுமையாக சேதமடைந்த பழத்தோட்டங்கள் மீண்டும் இயல்பான உற்பத்தி நிலைக்கு திரும்புவதற்கு, சாதாரண காலநிலை நிலவினாலும் குறைந்தது ஏழு ஆண்டுகள் வரை ஆகலாம் என அவர் கணித்துள்ளார்.
