Ontario முழுவதும் AI Data Centres வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அவற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்பது பல நகராட்சிகளுக்கு முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
AI Data Centres மிக அதிக அளவில் மின்சாரம் மற்றும் தண்ணீர் பயன்படுத்துவதுடன், இரைச்சல் மற்றும் சுற்றுப்புற பாதிப்புகள் ஏற்படலாம் என்ற கவலைகளும் முன்வைக்கப்படுகின்றன. இதனால் சில நகரங்கள் புதிய Data Centre திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி ஆய்வு செய்து வருகின்றன.
Ontario-வில் Data Centres-க்கு ஒரு வருட தடை உத்தரவு கொண்டுவந்த முதல் நகராட்சியாக Oakville கடந்த மாதம் மாறியது.
அதனைத் தொடர்ந்து, Mississauga செப்டம்பர் 16 அன்று பெரிய Data Centre திட்டங்களுக்கு ஒரு வருட தற்காலிக தடையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது.
Hamilton-ல் ஒரு வருட தடை முன்மொழியப்பட்டாலும், City Council அதனை நிராகரித்தது. இருப்பினும் மின்சாரத் தேவை, இரைச்சல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்ந்து ஆய்வு செய்யப்படுகின்றன.
Toronto மற்றும் Ottawa ஆகிய நகரங்களும் Data Centres தொடர்பான திட்டமிடல் விதிகள் மற்றும் புதிய மதிப்பீட்டு கட்டமைப்புகளை ஆய்வு செய்து வருகின்றன.
Sault Ste. Marie-யிலும் 50 megawatts-க்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் Data Centres தொடர்பாக தடை உத்தரவு முன்மொழியப்பட்டுள்ளது.
அதேவேளை Greater Napanee, தனது தொழில்துறை நிலங்களில் Data Centres அமைக்க அனுமதிக்கும் வகையில் விதிகளை மாற்றியுள்ளது. Milton, Burlington மற்றும் Waterloo Region ஆகியவையும் இந்த விவகாரத்தை தொடர்ந்து ஆய்வு செய்கின்றன.
AI வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்பும், நகரங்களின் மின்சாரம், தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் தேவைகளும் — இரண்டையும் எவ்வாறு சமநிலைப்படுத்துவது என்பதே தற்போது Ontario நகராட்சிகளின் முக்கிய கேள்வியாகியுள்ளது.
