Hamilton-ல் 15 வயது சிறுமி தொடர்பான மனிதக் கடத்தல் விசாரணையில் ஒருவர் கைது செய்யப்பட்டு பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Hamilton Police தெரிவித்துள்ளதன்படி, சமூக ஊடகங்களில் வெளியான ஒரு வீடியோ தொடர்பான தகவல் கிடைத்ததை அடுத்து, இந்த மாத தொடக்கத்தில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி, Ariel Rojas என்பவர் 15 வயது சிறுமியை அணுகி, அவரை பாலியல் சேவைகளில் ஈடுபடுத்த ஏற்பாடு செய்ய முன்வந்ததாக பொலிசார் குற்றஞ்சாட்டுகின்றனர்.
மேலும், ஆபாசப் பொருள் தயாரிப்பில் பங்கேற்குமாறும் அந்த சிறுமியிடம் கேட்டதாக விசாரணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து Ariel Rojas கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது Criminal Harassment, Invitation to Sexual Touching, 18 வயதுக்குட்பட்டவரை பாலியல் சேவைக்காக ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும், probation நிபந்தனைகளை மீறியதாக நான்கு குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் மேலும் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது சாட்சிகள் இருக்கலாம் என நம்பும் Hamilton Police, குற்றஞ்சாட்டப்பட்டவரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் Hamilton Police-ஐ தொடர்புகொள்ளுமாறும், விரும்பினால் Crime Stoppers மூலம் பெயர் குறிப்பிடாமல் தகவல் வழங்கலாம் என்றும் பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
