Ontarioவில் தடையை மீறி Toronto மேயர் தேர்தலுக்கு 4 லட்சம் டொலர் பந்தயம்!

Ontario மாகாணத்தில் பந்தயம் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ள Polymarket என்ற முன்கணிப்பு தளத்தில் (prediction platform), Toronto மேயர் தேர்தலுக்காக 400,000 அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகையில் பந்தயம் கட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் முடிவுகள் மீது பந்தயம் கட்டுவது Canadaவில் சட்டவிரோதமானது என்பதோடு, பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக Polymarket தளத்திற்கு ஈராண்டு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

எனினும், VPN தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சிலர் சர்வதேச அளவில் பந்தயம் கட்டி வருவதாக நிதித்துறை பேராசிரியர் Andreas Park தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இத்தளங்களைப் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என மேயர் வேட்பாளர் Olivia Chow தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், இது சட்டவிரோதமானது என மற்றொரு வேட்பாளரான Brad Bradford கருத்து தெரிவித்துள்ளார்.

விதிகளை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என Ontario Securities Commission (OSC) எச்சரித்துள்ளது.

Related Articles

Latest Articles