North York-இல் பயங்கரம்: ஒரே வீட்டில் இருந்த மூவர் குத்திக்காயம் – சந்தேக நபர் கைது!

கனடாவின் North York பகுதியில் உள்ள இல்லமொன்றில் இன்று அதிகாலை நிகழ்ந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக Toronto Police தெரிவித்துள்ளனர்.

Yonge Street மற்றும் Sheppard Avenue சந்திப்பிற்கு அருகிலுள்ள Glendora Avenue-இல் அமைந்துள்ள வீடொன்றில், அதிகாலை 3:40 மணியளவில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் முதலுதவிப் பிரிவினர், கத்திக்குத்துக்கு இலக்கான இரண்டு பெண்களையும்  ஆணொருவரையும் மீட்டனர்.

பெண்கள் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றைய நபர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

தாக்குதலைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பியோடிய சந்தேக நபரை பொலிசார் விரைந்து செயற்பட்டுக் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மூவரும் மற்றும் சந்தேக நபரும் ஒரே வீட்டில் வசிப்பவர்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மோதலுக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிசார், தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles