NBA நட்சத்திரம் பிராண்டன் கிளார்க் காலமானார் – கூடைப்பந்து உலகம் அதிர்ச்சி!

கனடிய NBA வீரரான பிராண்டன் கிளார்க் (Brandon Clarke) தனது 29-வது வயதில் காலமானார் என்ற அதிர்ச்சித் தகவலை மெம்பிஸ் கிரிஸ்லீஸ் (Memphis Grizzlies) அணி செவ்வாய்க்கிழமை பிற்பகல் அறிவித்துள்ளது.

வன்கூவரைச் (Vancouver) சேர்ந்த 29 வயதான பிராண்டன் கிளார்க் காலமானார் என்ற தகவலை அவரது அணி உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும், அவரது மரணத்திற்கான காரணம் இதுவரை பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை.

“பிராண்டன் கிளார்க்கின் மறைவு எங்களை மனமுடையச் செய்துள்ளது” எனத் தெரிவித்துள்ள மெம்பிஸ் கிரிஸ்லீஸ் (Memphis Grizzlies) அணி, அவர் ஒரு சிறந்த வீரராகவும், அதைவிடச் சிறந்த மனிதராகவும் திகழ்ந்ததாக புகழாரம் சூட்டியுள்ளது.

2019-ஆம் ஆண்டு முதல் ஏழு ஆண்டுகளாக NBA தொடரில் விளையாடி வந்த இவர், மெம்பிஸ் கிரிஸ்லீஸ் (Memphis Grizzlies) அணிக்காக 309 போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

இவர்  ஜா மொரான்ட் (Ja Morant) உடன் இணைந்து அணியின் நீண்டகால வீரராக விளங்கினார்.

2022-ஆம் ஆண்டு மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் (Minnesota Timberwolves) அணிக்கு எதிரான பிளே-ஆப் தொடரின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

Video thumbnail
சுற்றிவளைப்பின் போது றொரண்டோ பொலிஸ் அதிகாரி சுட்டுக்கொலை - 19 வயது இளைஞர் மீது கொலைக் குற்றம்!
00:51
Video thumbnail
உலகக்கிண்ணக் கால்பந்து ரசிகர் திருவிழா ரத்து - ஏமாற்றமடைந்த ரசிகர்கள்!
00:59
Video thumbnail
இன்னுமொருவர் புற்றுநோயினால் பாதிக்கப்படுவதைத் தடுப்போம்!அனைவரும் வருக! விழிப்புணர்வு நடைபவனி!
01:46
Video thumbnail
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - கனடா வங்கியின் முக்கிய அறிவிப்பு!
00:52
Video thumbnail
மார்க்கமில் சிறுவன் மீது ஓநாய் தாக்குதல் - பொலிஸார் அவசர எச்சரிக்கை!
01:07
Video thumbnail
றொரண்டோ FIFA உலகக் கிண்ண தொடக்க விழாவில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட இருவர் கைது!
00:39
Video thumbnail
இலங்கையில் தமிழ் கலைஞர் கைது - பிரம்டன் மேயர் கடும் கண்டனம்!
01:08
Video thumbnail
பயணக் காப்பீடு இருந்தும் ஒண்டாரியோ நபருக்கு வந்த $147,000 மருத்துவக் கட்டண அதிர்ச்சி!
01:39
Video thumbnail
றொரண்டோ பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் துப்பாக்கிச் சூட்டில் பட்டை காயம்!
00:46
Video thumbnail
பிராம்ப்டனில் புதிய டிரைவ்-டெஸ்ட் மையம் திறப்பு!
00:39

Related Articles

Latest Articles