கனடாவின் ஒன்ராறியோ, Highway 69 இல் Wallbridge Township பிரதேசத்தில் கடமானுடன் மோதி கார் ஒன்று விபத்திற்குள்ளானது.
இந்தக் காரில் ஸ்காபரோவைச் சேர்ந்த பதின்ம வயது இளைஞர் இருவர் இருந்தனர். இவர்களிடமிருந்து போதைப் பொருட்களும், துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்பின்னர் இரு இளைஞரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விபத்திற்குள்ளான வாகனத்திற்கு அருகில் சென்போது தீவிர கஞ்சா வாசனை வீசியதை அடுத்து பொலிசார் வாகனத்தை சோதனையிட்டுள்ளனர்.
இதன்போது துப்பாக்கி, ரவைகள், போதைப் பொருட்கள் என்பவற்றை பொலிசார் கைப்பற்றினர்.