AI தொழில்நுட்ப வளர்ச்சியுடன் அதிகரித்து வரும் பெரிய Data Centre-கள் தொடர்பாக, Mississauga நகரம் முக்கியமான முடிவொன்றை எடுக்கவுள்ளது.
10 megawatts-க்கும் அதிகமான மின்சாரத் தேவையைக் கொண்ட பெரிய Data Centre-களின் புதிய development-ஐ ஒரு வருடத்திற்கு தற்காலிகமாக நிறுத்தும் திட்டம் குறித்து Mississauga City Council இன்று வாக்களிக்கிறது.
இந்த இடைநிறுத்த காலத்தில், Data Centre-களால் ஏற்படக்கூடிய மின்சார பயன்பாடு, நீர் தேவை, சுற்றுச்சூழல் தாக்கம், இரைச்சல், பொது சுகாதாரம், உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார பயன்கள் உள்ளிட்ட பல அம்சங்களை ஆய்வு செய்து புதிய விதிமுறைகள் தேவையா என்பதை City அதிகாரிகள் ஆராயவுள்ளனர்.
இந்த விவாதத்தின் பின்னணியில், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட Prologis நிறுவனம் Mississauga-வின் northwest பகுதியில், சுமார் 220,000 சதுர அடி பரப்பளவுள்ள இரண்டு மாடி Data Centre ஒன்றை அமைக்க விண்ணப்பித்துள்ளது.
AI வளர்ச்சிக்குத் தேவையான Data Centre-கள் அதிக அளவு மின்சாரம் மற்றும் பிற வளங்களை பயன்படுத்துவதால், அவற்றுக்கு எந்த வகையான கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்பது Ontario முழுவதும் விவாதமாகியுள்ளது.
Mississauga Council ஏற்கனவே July 29 அன்று ஒரு வருட இடைநிறுத்தத்தை உருவாக்குவதற்கான by-law தயாரிக்க உத்தரவிட்டது. இன்று நடைபெறும் வாக்கெடுப்பில் அந்த Interim Control By-law இறுதியாக அங்கீகரிக்கப்படுமா என்பதே முக்கிய கேள்வி.
இதுபோன்ற தற்காலிக தடையை Oakville ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளது; Hamilton மற்றும் Burlington-ல் முன்வைக்கப்பட்ட முயற்சிகள் நிறைவேறவில்லை.
