கனடாவை ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாவது “Associate Member” ஆக இணைக்கும் யோசனையை கனடிய பிரதமர் மார்க் கார்னி வரவேற்றுள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கார்னி,
“ஐரோப்பாவும் கனடாவும் தனித்தனியாக வலிமையானவை; ஒன்றிணைந்து செயல்பட்டால் இன்னும் வலிமையானவை” என்ற கருத்தை முன்வைத்தார்.
Associate Member என்ற முன்மொழிவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எதிர்வினையை வெளியிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையை அமெரிக்காவுக்கு எதிரான ஒன்றாக தாம் கருதினால், ஐரோப்பிய பொருட்களுக்கு கடுமையான சுங்கவரிகளை விதிக்கலாம் அல்லது சில வர்த்தக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தலாம் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ஐரோப்பிய ஒன்றியம், கனடாவுடனான உறவை வலுப்படுத்தும் இந்த முயற்சி வேறு எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என்று தெரிவித்துள்ளது.
ட்ரம்பின் கருத்துக்கு பதிலளித்த கனடா பிரதமர் மார்க் கார்னி, கனடா யாருடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் என்பதைத் தானே முடிவு செய்யும் என்று சுட்டிக்காட்டினார்.
கனடா–EU எதிர்கால ஒத்துழைப்பில் முக்கிய கனிமங்கள், பாதுகாப்புத் துறை, செயற்கை நுண்ணறிவு, கணினித் தொழில்நுட்பம், எரிசக்தி பாதுகாப்பு, விண்வெளி மற்றும் டிஜிட்டல் வர்த்தகம் உள்ளிட்ட துறைகள் முக்கிய இடம் பெறலாம் என கார்னி தெரிவித்துள்ளார்.
