Marineland-இலிருந்து சென்ற மற்றுமொரு Beluga உயிரிழப்பு!

கனடாவின் Marineland-இலிருந்து அமெரிக்காவுக்கு மாற்றப்பட்ட மற்றுமொரு Beluga திமிங்கலம் உயிரிழந்துள்ளது.

Ontario, Niagara Falls-இல் மூடப்பட்ட Marineland-இலிருந்து Chicago-வின் Shedd Aquarium-க்கு கடந்த மாதம் மாற்றப்பட்ட Rain என்ற 20 வயதான Beluga திமிங்கலம் உயிரிழந்துள்ளது.

உயிரை காப்பாற்ற உடனடியாக முயற்சிகளை மேற்கொண்டபோதும் அவை பலனளிக்கவில்லை என Aquarium தெரிவித்துள்ளது.

இந்த மரணத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. 

Marineland-இலிருந்து Chicago-வுக்கு மாற்றப்பட்ட Peekachu என்ற 23 வயதான Belugaவும் கடந்த வாரம் உயிரிழந்திருந்தது.

Peekachu சரியாக உணவு உட்கொள்ளாத நிலையில், மருத்துவ பரிசோதனையில் dehydration ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. சிகிச்சை அளிக்கப்பட்டபோது அது திடீரென உயிரிழந்ததாக Shedd Aquarium தெரிவித்திருந்தது.

இதனால், Marineland-இலிருந்து Shedd Aquarium-க்கு மாற்றப்பட்ட Beluga திமிங்கலங்களில் குறுகிய காலத்தில் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

Marineland பொதுமக்களுக்கு 2024ஆம் ஆண்டு மூடப்பட்டது. நிதி நெருக்கடியை தொடர்ந்து அங்கிருந்த 30 Beluga திமிங்கலங்களும் நான்கு dolphins-களும், அமெரிக்கா மற்றும் ஸ்பெயினில் உள்ள ஐந்து Aquariums-க்கு அண்மையில் மாற்றப்பட்டன.

இந்த மிகப்பெரிய relocation நடவடிக்கை முடிவடைந்ததைத் தொடர்ந்து, கனடாவில் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த கடைசி whales மற்றும் dolphins-களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளன.

Related Articles

Latest Articles