March Break சுற்றுலா – கியூபா, மெக்சிகோவை தவிர்க்கும் கனடியர்கள் – புதிய இடங்களுக்கு அதிகரிக்கும் மவுசு!

கனடாவின் March break விடுமுறையை முன்னிட்டு, வழக்கமாகச் செல்லும் சுற்றுலாத் தலங்களுக்குப் பதிலாக கனடியர்கள் மாற்று இடங்களைத் தேர்வு செய்து வருவதாகத் சுற்றுலா முகவர்கள் தெரிவித்துள்ளனர்.

Cuba-வில் நிலவும் எரிபொருள் மற்றும் உணவுத் தட்டுப்பாடு, Mexico-வின் Puerto Vallarta பகுதியில் வெடித்துள்ள வன்முறை மற்றும் Jamaica-வில் ஏற்பட்ட சூறாவளி பாதிப்புகள் காரணமாகப் பயணிகள் தங்கள் திட்டங்களை மாற்றியுள்ளனர்.

குறிப்பாக, கியூபாவிற்கான முன்பதிவுகள் கடந்த ஆண்டை விட 86 சதவீதம் வரை சரிந்துள்ளன.

இதற்கு மாற்றாக Florida மற்றும் Dominican Republic போன்ற இடங்களுக்குச் செல்லும் கனடியர்களின் எண்ணிக்கை 100 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது.

மேலும், Costa Rica, Greece மற்றும் Portugal போன்ற நாடுகளும் புதிய விருப்பத் தேர்வுகளாக உருவெடுத்துள்ளன.

விலை உயர்வு மற்றும் பாதுகாப்புக் கவலைகள் இருந்தபோதிலும், கனடாவின் கடும் குளிரிலிருந்து தப்பிக்கப் பயணிகள் அதிக பணம் செலவழித்தாவது வெளிநாடுகளுக்குச் செல்ல ஆர்வம் காட்டி வருவதாக Durham Travel நிறுவனத்தின் John Wood தெரிவித்துள்ளார்.

Video thumbnail
கனடா சுற்றுலாத்துறையில் பாரிய வளர்ச்சி - ஒரே காலாண்டில் $28.4 பில்லியன்!
01:05
Video thumbnail
பாதுகாப்பு சாதனங்களிலிருந்தே Bitcoin கொள்ளை!
01:34
Video thumbnail
வானில் மோதிய இரண்டு பயிற்சி விமானங்கள் - ஒருவர் உயிரிழப்பு!
00:57
Video thumbnail
Hamilton குடியிருப்பாளர்களுக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு கிடைத்த சுத்தமான குடிநீர்!
01:00
Video thumbnail
நிலவில் இன்று பெரும் மோதல்! SpaceX ரொக்கெட் துண்டு நிலவை மோதுகிறது!
01:02
Video thumbnail
Ontario, Quebec வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி — வியாழன் 10¢ குறைகிறது எரிபொருள் விலை
01:48
Video thumbnail
மனைவி கொலையில் கைதான முன்னாள் போதகர் சிறையில் தற்கொலை: கடிதத்தில் குற்றமற்றவர் என உரிமை கோரல்!
01:03
Video thumbnail
WestJet வேலைநிறுத்தம்: தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் கனடா பயணிகள்!
01:19
Video thumbnail
மழை வெள்ளத்தில் மூழ்கிய Niagara - St. Catharines, Lincoln நகரங்களில் அவசரநிலை!
00:57
Video thumbnail
'Toronto Islands' போலி Ferry Tickets விற்கும் மோசடி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை!
01:24

Related Articles

Latest Articles