GTA-வில் மீண்டும் பனிப்பொழிவு – 10 சென்டிமீட்டர் வரை உயர்வடையும் என எச்சரிக்கை!

toronto.citynews.ca

வசந்த காலத்தின் தொடக்கத்தைப் போன்ற இதமான வானிலை நிலவிய நிலையில், மீண்டும் பலத்த பனிப்பொழிவு ஏற்படும் என Toronto மற்றும் GTHA பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Alberta Clipper எனப்படும் வேகமான காற்றழுத்த மண்டலம் காரணமாக, வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் வரை கனமான பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சாலைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும் என்பதால் வாகன ஓட்டிகள் அவதானமாக இருக்குமாறு Environment and Climate Change Canada அறிவுறுத்தியுள்ளது.

York மற்றும் Durham பகுதிகளில் 10 செ.மீ வரையிலும், Kitchener மற்றும் Caledon போன்ற உயரமான இடங்களில் 15 செ.மீ வரையிலும் பனிப்பொழிவு இருக்கலாம்.

அத்துடன் மணிக்கு 50 முதல் 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒரு வானிலை மாற்றம் ஏற்படவுள்ளதால், பனி, மழை அல்லது உறைபனி மழை (Freezing rain) பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஊடகத்துறை மாணவர்களுக்கு பொன்னான வாய்ப்பு: OMNI Television கல்வி உதவித்தொகை அறிவிப்பு!
Next articleMarch Break சுற்றுலா – கியூபா, மெக்சிகோவை தவிர்க்கும் கனடியர்கள் – புதிய இடங்களுக்கு அதிகரிக்கும் மவுசு!