கடந்த 2025-ஆம் ஆண்டு வான்கூவரில் (Vancouver) நடைபெற்ற பிலிப்பைன்ஸ் கலாச்சார விழாவில் (Lapu-Lapu Day), கூட்டத்திற்குள் கார் புகுந்த தாக்குதலில் 11 பேர் உயிரிழந்த சோக சம்பவம் பதிவானது.
அதற்கு ஒரு வருடம் கூட நிறைவடையாத நிலையில், மீண்டும் அந்த விழாவை நடத்த எடுக்கப்படும் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
Filipino B.C. என்ற அமைப்பு வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி இந்த விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
ஆனால், அந்தத் கொடூரத் தாக்குதலில் காயமடைந்த Val De La Cruz போன்ற தப்பிப்பிழைத்தவர்கள், “இது தங்களுக்கு இழைக்கப்படும் அவமதிப்பு” எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
இன்னும் அந்தத் தழும்புகளில் இருந்து மீளாத நிலையில், இவ்விழாவைத் தள்ளிவைக்கக் கோரி 1,200 க்கும் மேற்பட்டோர் இணைய மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
அத்துடன், பாதிக்கப்பட்டவர்களுக்காகத் திரட்டப்பட்ட $1.6 மில்லியன் நிதியுதவி (Kapwa Strong Fund) எங்கே போனது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்தத் தொகையை விழா நடத்துவதற்குப் பதிலாக, நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பயன்படுத்த வேண்டும் என United Filipino Canadian Associations in B.C. வலியுறுத்தியுள்ளது.
கலாச்சார முறைப்படி ஒரு வருட துக்கக் காலம் கூட முடியாமல் இத்தகைய கொண்டாட்டங்கள் தேவையில்லை எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.










