அமெரிக்க அதிபர் Donald Trump, Lake Ontario-வை அமெரிக்க அரசாங்க பயன்பாட்டில் “Lake America” என பெயர் மாற்ற உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கனடாவில் அதற்கு எதிர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆனால் சில கனடிய நிறுவனங்கள் இந்த சர்ச்சையை ஒரு புதிய வாய்ப்பாக மாற்றியுள்ளன.
கனடிய ஆடை நிறுவனமான Jackpine, “Lake Ontario” என்ற பெயர் பொறிக்கப்பட்ட தொப்பிகள் மற்றும் T-shirts-ஐ உடனடியாக சந்தைக்கு கொண்டு வந்துள்ளது.
Jackpine நிறுவனத்தின் இணை நிறுவனர் Liam Mooney,
“இது எங்கள் ஏரி. இதன் பெயர் Lake Ontario. அது மாறப்போவதில்லை” என்ற உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
இது வெறும் அரசியல் சர்ச்சையை பயன்படுத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கான முயற்சி அல்ல என்றும், Made in Canada உற்பத்தி மற்றும் கனடிய தொழிலாளர்களின் திறமையை முன்னிலைப்படுத்துவதே நோக்கம் என்றும் நிறுவனம் கூறுகிறது.
இதேபோன்று மற்றொரு கனடிய நிறுவனமான Province of Canada-வும் Lake Ontario பெயருடன் புதிய ஆடைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
Jackpine இதற்கு முன்பும் Trump-ன் “Canada 51st State” கருத்துகளுக்கு எதிராக “Canada Is Not For Sale” என்ற தொப்பியை வெளியிட்டு பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது.
இப்போது அதே பாணியில்,
Still Lake Ontario Up Here என்ற செய்தியுடன் புதிய தயாரிப்புகள் சந்தைக்கு வந்துள்ளன.
அரசியல் சர்ச்சைக்கு கனடிய நிறுவனங்கள் கொடுத்திருக்கும் இந்த வித்தியாசமான பதில் தற்போது சமூக ஊடகங்களிலும் கவனம் ஈர்த்து வருகிறது.
