Labour Day-க்கு GAS $1.90? Toronto-வில் பெட்ரோல் விலை எகிறுமா?

Labour Day நீண்ட வார இறுதி நெருங்கும் நிலையில், Toronto மற்றும் GTA பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கு மீண்டும் பெட்ரோல் விலை அதிர்ச்சி காத்திருக்கலாம்.

எரிபொருள் விலை ஆய்வாளர் Dan McTeague-ன் கணிப்பின்படி, Toronto-வில் பெட்ரோல் விலை ஞாயிற்றுக்கிழமைக்குள் லிட்டருக்கு மேலும் 7 சென்ட் வரை அதிகரித்து $1.839 அளவை எட்டக்கூடும்.

வெள்ளிக்கிழமை மட்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 சென்ட் அதிகரித்து, Toronto-வில் சராசரியாக $1.769 per litre என்ற அளவில் காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சனிக்கிழமை மேலும் 2 சென்டும், ஞாயிற்றுக்கிழமை மேலும் 5 சென்டும் அதிகரிக்கலாம் என McTeague கணித்துள்ளார்.

Labour Day weekend-ஐ நோக்கிச் செல்லும்போது பெட்ரோல் விலை மேலும் உயர்ந்து, அடுத்த வார இறுதியில் லிட்டருக்கு $1.90 அளவை எட்டக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

அதாவது 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு வாகனத்தை முழுமையாக நிரப்ப வேண்டுமானால், பெட்ரோல் விலை $1.90 ஆக உயர்ந்தால் சுமார் $95 செலவாகும்.

இதற்கு மத்தியில் diesel விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

Diesel விலை அதிகரிப்பது லாரி போக்குவரத்து முதல் உணவு, கட்டுமானம் மற்றும் பொருட்கள் விநியோகம் வரை பல துறைகளின் செலவுகளையும் அதிகரிக்கக்கூடிய ஒன்றாகும்.

இதற்கிடையில், கனடா அரசு கடந்த ஏப்ரல் 20 முதல் பெட்ரோல் மற்றும் diesel மீதான Federal Fuel Excise Tax-ஐ தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த வரிச் சலுகை Labour Day ஆன செப்டம்பர் 7 வரை அமலில் இருக்கும். அதன் பின்னர் செப்டம்பர் 8 முதல் பெட்ரோலுக்கு லிட்டருக்கு 10 சென்ட் Federal Excise Tax மீண்டும் அமலுக்கு வரவுள்ளது.

இதனால் Labour Dayக்கு பின்னர் பெட்ரோல் விலைகளில் மேலும் அழுத்தம் ஏற்படுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

Related Articles

Latest Articles