பிரித்தானிய அரசர் மூன்றாவது சார்ள்ஸ் மற்றும் ராணி கமில்லா ஆகியோர் அரச முறைப் பயணமாக கனடா வந்தடைந்தனர்.
ஒட்டாவா விமான நிலையத்தில் வந்திருங்கிய அரச குடும்பத்திற்கு கனடாவில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. கனடா பிரதமர் கார்ணி, அரச குடும்பத்தினரை வரவேற்றார்.
அரச குடும்பத்தினர் அதிகாரப்பூர்வ அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்றனர். அத்துடன் புதிய பாராளுமன்ற அமர்வை ஆரம்பித்துவைக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற அமர்வின் ஆரம்ப உரையை அரசர் சார்ள்ஸ் நிகழ்த்துகின்றமை விசேட அம்சமாகும்.
ராணி கமில்லா அரசரின் Privy Council-இல் உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இது கனடா அரசியலில் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்.