இரண்டு மாதங்களுக்கும் மேலாக, குழாய் நீரை நேரடியாகப் பயன்படுத்த முடியாமல் வாழ்ந்த மக்களுக்கு இறுதியாக நிம்மதி கிடைத்துள்ளது!
Hamilton அருகே Freelton பகுதியில் அமைந்துள்ள Fernbrook Resort-இல், மே 25ஆம் திகதி முதல் நடைமுறையில் இருந்த குடிநீரைக் கொதிக்கவைத்துப் பயன்படுத்தும் அறிவுறுத்தல் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
150-க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் இந்தக் குடியிருப்புப் பகுதியில், குடிப்பது, உணவு தயாரிப்பது, பாத்திரங்களைக் கழுவுவது, பல் துலக்குவது மற்றும் குழந்தைகளுக்கான பால் தயாரிப்பது உள்ளிட்ட தேவைகளுக்கு குழாய் நீரைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதனால் அங்கு வசித்தவர்கள் தினமும் போத்தல் நீரை நம்பியிருக்கவும், தண்ணீரைக் கொதிக்கவைத்துப் பயன்படுத்தவும் வேண்டிய நிலை ஏற்பட்டது.
முதியவர்கள், உடல்நலப் பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் சிறு குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் இதனால் அதிக சிரமங்களை எதிர்கொண்டதாகக் கூறப்பட்டது.
இப்போது அந்த அறிவுறுத்தல் நீக்கப்பட்டுள்ளதால், குடியிருப்பாளர்கள் வழக்கமான முறையில் நீரைப் பயன்படுத்த முடியும்.
