GTHA பகுதியில் கனமழை மற்றும் அடர் மூடுபனி – சிறப்பு வானிலை எச்சரிக்கை!

Greater Toronto Area (GTA) மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பலத்த மழை, இடியுடன் கூடிய மின்னல் மற்றும் அடர் மூடுபனி நிலவக்கூடும் என Environment Canada சிறப்பு வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Toronto, Peel, Durham மற்றும் Halton ஆகிய பிராந்தியங்களில் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை மாலை வரை சுமார் 15 முதல் 25 மில்லிமீட்டர் வரை மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நிலவும் மிதமான வெப்பநிலையால் பனிப்பாறைகள் உருகி மேலதிக நீர் ஓட்டம் ஏற்பட வாய்ப்புள்ளன.

தரைப்பகுதி இன்னும் உறைந்த நிலையில் இருப்பதால் ஆங்காங்கே நீர் தேங்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக Northern York பிராந்தியத்தில் 40 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என்பதால் அங்கு மழைக்கால எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், Toronto, Brampton, Mississauga, Hamilton உள்ளிட்ட பகுதிகளில் இன்று இரவு அடர் மூடுபனி நிலவக்கூடும் என எதிர்வுகூறப்படுகிறது.

இதனால் வாகன ஓட்டுனர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதற்கமைய, ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை தெளிவான வானிலையுடன் 10°C ஆக பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
கனடாவில் தீ மற்றும் தீக்காய அபாயம்: ஆயிரக்கணக்கான பொருட்கள் மீளழைப்பு!
00:54
Video thumbnail
கனடாவின் புதிய குடிவரவுத் திட்டம் 2027-29: 200,000 பேருக்கு நிரந்தர குடியுரிமை (PR) வாய்ப்பு!
01:19
Video thumbnail
கல்கரியில் நீர் பயன்பாட்டு கட்டுப்பாடு: இலக்கை எட்டிய மக்கள்!
01:03
Video thumbnail
மக்களின் வாழ்க்கைக் செலவைக் குறைக்க அரசு அறிவித்துள்ள சலுகைகள்!
01:20
Video thumbnail
கனடா பஜெட் 2026: பொருளாதார வளர்ச்சி மற்றும் வசதிக்காக $142 பில்லியன் திட்டம் அறிமுகம்
01:25
Video thumbnail
கனடா பட்ஜெட் 2026: தெரிந்துகொள்ள வேண்டிய 6 முக்கிய அம்சங்கள்
01:13
Video thumbnail
கண்டுகொள்ளாத விமான நிறுவனம்? கனடா குடும்பத்திற்கு நேர்ந்த சோதனையும் நிம்மதியும்!
01:03
Video thumbnail
GTA வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி செய்தி: எாிபொருள் விலை கணிசமாகக் குறைகிறது!
00:56
Video thumbnail
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு தர முயன்ற 12 பேர் கைது: டர்ஹாம் பொலிசாரின் அதிரடி நடவடிக்கை!
01:06
Video thumbnail
கனடாவில் தனித்துவமான 'காமன் லூன்' பறவைகளின் எண்ணிக்கை சரிவு: ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
01:19

Related Articles

Latest Articles