GTA-வில் மீண்டும் பனிப்பொழிவு – 10 சென்டிமீட்டர் வரை உயர்வடையும் என எச்சரிக்கை!

வசந்த காலத்தின் தொடக்கத்தைப் போன்ற இதமான வானிலை நிலவிய நிலையில், மீண்டும் பலத்த பனிப்பொழிவு ஏற்படும் என Toronto மற்றும் GTHA பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Alberta Clipper எனப்படும் வேகமான காற்றழுத்த மண்டலம் காரணமாக, வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் வரை கனமான பனிப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சாலைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படும் என்பதால் வாகன ஓட்டிகள் அவதானமாக இருக்குமாறு Environment and Climate Change Canada அறிவுறுத்தியுள்ளது.

York மற்றும் Durham பகுதிகளில் 10 செ.மீ வரையிலும், Kitchener மற்றும் Caledon போன்ற உயரமான இடங்களில் 15 செ.மீ வரையிலும் பனிப்பொழிவு இருக்கலாம்.

அத்துடன் மணிக்கு 50 முதல் 80 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒரு வானிலை மாற்றம் ஏற்படவுள்ளதால், பனி, மழை அல்லது உறைபனி மழை (Freezing rain) பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
கனடாவில் அதிகரித்து வரும் பலதுணை உறவுகள் – சட்ட ரீதியில் சிக்கல்!
01:17
Video thumbnail
றொரண்டோவிற்கு விசேட வானிலை எச்சரிக்கை - இடியுடன் கூடிய மழையைத் தொடர்ந்து கடும் குளிர்!
01:09
Video thumbnail
ஸ்மார்ட் கண்ணாடி மூலம் நூதன மோசடி – றொரண்டோவில் பாரிய சில்லறை வர்த்தக மோசடி கும்பல் கைது!
01:00
Video thumbnail
வான்கூவர் ஸ்கைட்ரெயினில் புதிய மார்க் V ரயில்கள் - பயணிகளுக்கு கூடுதல் வசதி!
01:07
Video thumbnail
சர்ச்சில் துறைமுக விரிவாக்கம் - பணிகளை முடிக்க மத்திய அரசு கடுமையான நிபந்தனை!
01:20
Video thumbnail
மிசிசாகாவில் பயங்கர தீ விபத்து - தனது தாய் மற்றும் சகோதரரைக் காப்பாற்ற தீக்குள் குதித்த நபர்!
00:55
Video thumbnail
ஸ்கார்பரோ ரயில் நிலையங்களில் வாகனத் திருட்டு - மூவர் கைது!
01:13
Video thumbnail
மளிகைப் பொருள் விலை உயர்வு - 'சர்வைலன்ஸ் பிரைசிங்' தடையை நிராகரித்தார் முதல்வர் டக் போர்ட்!
01:29
Video thumbnail
ஹாமில்டனில் போலி பொலிஸ் அதிகாரி அட்டகாசம்!
01:11
Video thumbnail
கனடா தபால் சேவை மாற்றம் - வீட்டுக்கு வீடு தபால் விநியோகம் விரைவில் நிறுத்தம்!
01:05

Related Articles

Latest Articles